பாம்பு டான்ஸ் ஆடும் கோலி; இந்திய அணி கொண்டாட்டம்!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 07:54 pm
virat-kohli-does-the-snake-dance-as-india-celebrates-victory

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற இந்திய அணி, தொடர்ந்து, டெஸ்ட் தொடரையும் 2-1 என கைப்பற்றியுள்ளது. 4வது டெஸ்ட் மழையால் டிரா ஆனதை தொடர்ந்து, இந்திய அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் இறங்கினர். 

மைதானத்திலேயே விராட் கோலி தலைமையில் இந்தியா வீரர்க்ள் டான்ஸ் ஆடி ரசிகர்களுக்கு விருந்தளித்தனர். முக்கியமாக, இந்த தொடரிலேயே அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர், புஜாரா டான்ஸ் ஆட முடியாமல் திணறும் வீடியோ வைரலாகி வருகிறது. டான்ஸ் ஆட தயங்கும் புஜாராவை கோலி ஆட வைக்க முயற்சித்து தோற்றும் போகிறார். 

கொண்டாட்டங்களுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கோலி "நடப்பது போல, அது ஒரு சிம்பிளான டான்ஸ் தான். ஆனால், அதை கூட புஜாராவால் செய்ய முடியவில்லை" என கோலி கிண்டல் செய்தார். 
 
மற்றொரு வீடியோவில் இந்திய அணி வீரர்கள் மேளதாளத்துடன் ஆட்டம் போட்டனர். கோலியுடன் அதிரடி வீரர் ஹர்டிக் பாண்டியா, இஷாந்த் ஷர்மா உள்ளிட்டோரும் சேர்ந்து பிரபல பாம்பு டான்ஸ் ஆடினர்.
 

வெற்றிக்களிப்பில் இருக்கும் இந்திய அணி, வரும் 12ம் தேதி முதல், ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close