இந்தியாவின் சரித்திர வெற்றி - கங்குலி பாராட்டு

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 04:33 am
ganguly-hails-indian-batting-after-historic-victory-in-australia

முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி, இந்திய அணி சரித்திர சாதனை படைத்துள்ள நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி இந்தியாவின் பேட்டிங் தான் வெற்றிக்கு காரணம் என புகழ்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி, டெஸ்ட் தொடரையும் 2-1 என வென்று அசத்தியுள்ளது. இது ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வெல்லும் முதல் டெஸ்ட் தொடராகும். சரித்திர சாதனையை படைத்துள்ள இந்திய அணிக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய பேட்டிங்கை பாராட்டினார். இதுகுறித்து கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் அவர் செய்தியாளரிடம் பேசியபோது, "இது ஒரு மகத்தான வெற்றி. இந்திய வீரர்கள் மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர். முக்கியமாக பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினர். 400-600 ரன்களை எடுத்ததுதான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்" என கூறினார்.

இதற்கு முன்னதாக 2004ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் கங்குலி தலைமையிலான இந்திய அணி 1-1 என டெஸ்ட் தொடரை சமன் செய்தது தான் இந்தியாவின் சிறந்த பெர்பார்மன்ஸாக இருந்தது. 2004ன் இந்திய அணி சிறந்ததா, அல்லது கோலி தலைமையிலான தற்போதைய அணி சிறந்ததா என கேட்டதற்கு, "நான் எப்போதுமே இரண்டு அணிகளை ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. அதனால் இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது" என்றார் கங்குலி.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close