ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு பறந்த தோனி!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 10:17 am
ms-dhoni-rohit-sharma-on-their-way-to-australia-for-odi-series

வரும் 12ம் தேதி தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும், ரோகித் சர்மாவும் அங்கு சென்றுள்ளனர். 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இந்தியா விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

அடுத்து நடந்த, 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது. அத்துடன், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 71 ஆண்டுகால காத்திருப்பை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீர்த்துள்ளது. 

 

 

இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 12ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட தோனி தேர்வாகி உள்ளார். இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தோனி ஆஸ்திரேலியாவுக்கு பறந்துள்ளார். மேலும் குழந்தையைப் பார்ப்பதற்காக இந்தியாவுக்கு திரும்பிய ரோகித் சர்மாவும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க ஆஸி சென்றார். 

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close