வெறும் 9 போட்டிகளில் தோனியை மிஞ்சிய ரிஷப் பன்ட்!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 03:33 pm
pant-beats-dhoni-in-icc-rankings

இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து, ஐசிசி சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் தோனியின் சிறந்த இடத்தை மிஞ்சியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவின் விக்கெட் கீப்பராக களமிறங்கிய ரிஷப் பன்ட், தொடரில் 350 ரன்களை விளாசினார். முக்கியமாக கடைசி போட்டியில், 159 ரன்கள் அடித்து நாட் அவுட்டாக இருந்த பன்ட், இந்தியா கணிசமான முன்னிலை பெற உதவினார். இது மட்டுமல்லாமல், இந்த தொடரில் 20 கேட்ச்களை பிடித்துள்ளார். 

இந்நிலையில், ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசை பட்டியலில், ரிஷப் பன்ட் 20 இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்துள்ளார். இது ஒரு இந்திய விக்கெட் கீப்பர் எடுக்கும் அதிகபட்ச ரேங்கிங் ஆகும். இதற்கு முன், 1973ம் ஆண்டு இந்திய வீரர் பரூக் என்ஜினீயர், 17வது இடம் பிடித்ததே ஒரு இந்திய விக்கெட் கீப்பரின் அதிகபட்ச தரவரிசை இடமாக இருந்தது. முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் தோனி கூட, அதிகபட்சமாக டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 19வது இடத்தை மட்டுமே பிடித்திருந்தார். டெஸ்ட் பேட்ஸ்மேனாக தோனி அதிகபட்சமாக எடுத்த 662 புள்ளிகள் சாதனையையும், பன்ட் 673 புள்ளிகள் எடுத்து மிஞ்சியுள்ளார். 

இவ்வளவு பெரிய சாதனையை, 21 வயதான பன்ட், வெறும் 9 போட்டிகளிலேயே படைத்துள்ளது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close