இந்தியாவின் வெற்றி இப்படி தான் இருக்கும்: முன்பே கணித்த அனில் கும்ப்ளே!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 03:58 pm
how-anil-kumble-was-spot-on-with-his-prediction-ahead-of-india-australia-test-series

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவை அனில் கும்ப்ளே சரியாக கணித்தது குறித்து ரசிகர்கள் சிலாகித்து பேசி வருகின்றனர். 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இந்தியா விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

அடுத்து நடந்த, 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது. அத்துடன், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 71 ஆண்டுகால காத்திருப்பை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீர்த்துள்ளது. 

முன்னதாக இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெறும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே கணித்து கூறியிருந்தார். அப்போது பேசிய அவர், "இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும், ஒரு போட்டி மழையால் ரத்தாகும்" என்று  கூறினார். மேலும் இதே போல விவிஎஸ் லக்‌ஷ்மண் தனது கணிப்பில் இந்தியா 3-1 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று கூறியிருந்தார். 

ரிக்கி பாண்டிங் கூறும் போது, இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெறும் என்று கூறியிருந்தார். கடைசியில் அனில் கும்ப்ளே கூறியது பலித்துள்ளது. இவ்வளவு சரியாக அவர் கணித்துள்ளதை ரசிகர்கள் சிலாகித்து பேசி வருகின்றனர். 

குறிப்பாக ரவி சாஸ்திரியை அனுப்பிவிட்டு மீண்டும் அனில் கும்ப்ளேவையே  கோச்சாக நியமனம் செய்யுங்கள் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close