அப்பாடா! முழுக்க இந்தியாவிலேயே நடக்கும் ஐபிஎல்... மார்ச் 23ல் துவங்குகிறது!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 05:17 pm
ipl-2019-to-be-held-in-india

2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரை, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டில் நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வந்த நிலையில், முழு தொடரையும் இந்தியாவியிலேயே நடத்த உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பிரபல ஐபிஎல் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வரும் மார்ச் மாதம் துவங்க இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில், இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஐபிஎல் தொடருக்கு போதிய பாதுகாப்பு அளிப்பது குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்தது. இதனால், தொடரை, வெளிநாட்டில் நடத்துவது குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வந்தது. முன்னதாக, 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில், தேர்தல் காரணமாக, ஐபிஎல் தொடர் தென் ஆப்பிரிக்காவிலும், ஐக்கிய அரபு அமீரகத்திலும் (பாதி தொடர்) நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இந்தியாவிலேயே தொடரை நடத்த உள்ளதாக உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாக கமிட்டி தெரிவித்துள்ளது. மத்திய மாநில ஆணையங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்த முடிவெடுக்கப்படுவதாகவும், மார்ச் 23ம் தேதி முதல் போட்டிகள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close