உலக கோப்பை தொடரில் பண்ட் இருக்கிறாராம்... அப்போ தோனி?

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 09:38 am
pant-definitely-part-of-our-world-cup-plans-chief-selector-msk-prasad

உலக கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் நிச்சயம் பண்ட் இருக்கிறார் என்று எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக சிட்னி டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்தார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் பண்ட்டின் 2வது சதம் இதுவாகும். 

மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி திட்டத்தில் ரிஷப்பிற்கு கட்டாயம் இடமுண்டு என்று தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘உலக கோப்பைக்கான விக்கெட் கீப்பர்களில் ஒருவராக ரிஷப் பண்ட் இருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்யும் வேலைகள் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. உலக கோப்பை திட்டத்தில் ரிஷப்  ஒரு பகுதியாக இருப்பார்.

வீரர்களின் வேலைப்பளு விவகாரத்தில்தான் அவர் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. தற்போது எத்தனை வீரர்கள் ஓய்வில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம்.அவர்  டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதன்பின் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். உடல் ஏற்கனவே சோர்வடைந்திருக்கும். அவர் அதிக வலிமையுடன் அணிக்கு திரும்புவார்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த ஒரே விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தான். அவருக்கு நாங்கள் சில இலக்கு நிர்ணயம் செய்தோம். நாங்கள் அவருக்கு நிர்ணயம் செய்ததை அவர் நிறைவேற்றிவிட்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் சிட்னி டெஸ்ட் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும்’’ என்றார்.

இவர் இவ்வாறு பேசி உள்ளது ஒருபுறம் ரிஷப் பண்ட் பற்றியது என்றாலும், தோனியின் நிலையை கேள்விக்குறியாக்கி உள்ளது. ரிஷப் பண்ட் உலக கோப்பை போட்டியில் விக்கெட் கீப்பராக இருந்தால் தோனியின் நிலை என்ற என்று ரசிகர்கள் குழுப்பத்தில் உள்ளனர். 

newstm.in

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close