தென்னாப்பிரிக்க 'சூப்பர் கிங்' ஆல்பி மார்க்கல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 10:03 pm
albie-morkel-retires-from-all-forms-of-cricket

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஆல்பி மார்க்கல், 20 ஆண்டு கிரிக்கெட் வாழ்வுக்கு பிறகு, அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் மிக சிறந்த ஆல்ரவுண்டர்களுள் ஒருவராக கருதப்படுபவர் ஆல்பி மார்க்கல். வேகப்பந்து வீச்சிலும், அதிரடி பேட்டிங்கிலும் கலக்கி வந்த இவர், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 சீசன்களில் விளையாடி, 974 ரன்கள் அடித்து, 85 விக்கெட்டுகளையும் எடுத்து சென்னை ரசிகர்கள் நெஞ்சில் நீங்காத இடம் பிடித்தார். டி20 போட்டிகளில் தன்னை ஸ்பெஷலிஸ்ட்டாக அடையாளப்படுத்திக் கொண்ட மார்க்கல், சர்வதேச டி20-யில், 4247 ரன்களும், 247 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

இந்த நிலையில், அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியபோது "கிரிக்கெட் களத்தில் எனக்கான நேரம் முடிந்து விட்டது. அதனால் விளையாட்டிலிருந்து என்னுடைய ஓய்வை தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 20 ஆண்டுகளில் என் வாழ்க்கை மகத்தான ஒரு பயணத்தை மேற்கொண்டு பல நல்ல நினைவுகளை தந்துள்ளது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கத்துக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்காக விளையாடியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. என் குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், ஸ்பான்சர்கள் எல்லோருக்கும் நன்றி. முக்கியமாக என்னை தொடர்ந்து ஆதரித்து வந்த என் மனைவிக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close