தெரியாமல் பேசிவிட்டேன்... இது போல மீண்டும் நடக்காது: பிசிசிஐக்கு பாண்ட்யா பதில்!

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 05:38 pm
hardik-pandya-responds-to-bcci-s-show-cause-notice

காபி வித் கரண் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியது குறித்து பிசிசிஐ கேள்வி எழுப்பியதையடுத்து அதற்கு பாண்ட்யா, தெரியாமல் பேசிவிட்டேன், இனி அவ்வாறு நடக்காது என உறுதியளித்துள்ளார். 

அவர் தனது பதிலில், "நான் கலந்துக் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில், மற்றவர்வர்களின் மனம் புண்படும் என்பதை உணராமல், அவ்வாறு பேசிவிட்டேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். 

வேண்டுமென்றே யாரையும் புண்படுத்த வேண்டும் என்று நான் அவ்வாறு பேசவில்லை. இனி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்று உறுதியளிக்கிறேன். என்னுடை தவறை புரிந்து கொண்டு அதற்காக முன்பே பொது மன்னிப்பு கேட்டுவிட்டேன்" என்று பதில்ளித்துள்ளார். 

முன்னதாக, காபி வித் கரண் நிகழ்ச்சியில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும், அதனைப் பற்றி தனது வீட்டில் வெளிப்படையாக பேசுவதையும் பற்றி ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.  இதனையடுத்து இது குறித்து பிசிசிஐயிடம் இருந்து பாண்டியா மற்றும் ராகுலுக்கு எச்சரிக்கை அனுப்பபட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டார். மேலும் அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பேசியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு  அவர்கள் 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. அதற்கு பாண்ட்யா தற்போது பதில் அளித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close