பாண்ட்யாவின் கருத்து இந்திய அணியை பிரதிபலிக்காது: விராட் கோலி

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 12:39 pm
virat-kohli-breaks-silence-on-hardik-pandya-kl-rahul-s-comments

ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுலின் கருத்துக்கள் இந்திய அணியை பிரதிபலிக்காது என்று இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியுள்ளார். 

காபி வித் கரண் நிகழ்ச்சியில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும், அதனைப் பற்றி தனது வீட்டில் வெளிப்படையாக பேசுவதையும் பற்றி ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.  இதனையடுத்து இது குறித்து பிசிசிஐயிடம் இருந்து பாண்டியா மற்றும் ராகுலுக்கு எச்சரிக்கை அனுப்பபட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டார். மேலும் அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பேசியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு  அவர்கள் 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. அதற்கு பாண்ட்யா பதிலும் அளித்தார். 

இந்நிலையில் இது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.  அவர் பேசும் போது, "இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பவர்கள் தனிப்பட்ட ஒருவரின் கருத்தில் தலையிடுவது இல்லை. இந்த விவகாரம் இந்திய அணியின் டிரெசிங் ரூம் பற்றி தீர்மானிக்காது. 

நடந்து இருக்கும் சம்பவத்தின் வீரியம் என்ன என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடிகிறது. அது அவர்களுக்கும் புரியும். இதில் இருந்து என்ன தவறாக நடந்தது என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். இந்திய அணியை பொறுத்தவரை அவர்கள் கருத்துக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. தற்போது இப்படி நடந்திருப்பது துருதஷ்டவசமானது. நம்மை மீறி சில விஷயங்கள் நடந்துவிடும்" என அவர் கூறியுள்ளார்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close