ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி பெளலிங்!

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 07:40 am
cricket-australia-won-a-toss-and-select-batting-first

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேட்பன் பேட்டிங்கை தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி முதலில் பந்து வீசுகிறது.

இந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது. முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன்பின்ச், தமது அணிக்கு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி  முதலில் பெளலிங் செய்ய உள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி வரலாற்று சாதனைப் படைத்தது. இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  ஒருநாள் போட்டி தொடரை இந்தியா வெல்ல வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களிடம் மேலோங்கி உள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close