பாண்ட்யா, ராகுல் செல்லும் பேருந்தில் கூட இனி செல்லமாட்டேன்: ஹர்பஜன் சிங்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 08:20 am
i-would-not-travel-in-same-team-bus-with-hardik-pandya-and-kl-rahul-hs

பாண்ட்யா, ராகுல் ஆகியோர் செல்லும் அணி பேருந்தில்கூட இனி நான் செல்லமாட்டேன் என்று பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். 

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் தற்போது பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுலுக்கு  கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவர்களின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹர்பஜன் சிங், "அவர்கள் பேசிய விஷயங்கள் குறித்து நாங்கள் எங்களின் நண்பர்களிடம் கூட பேசமாட்டோம். ஆனால் இவர்களோ பலரும் பார்க்கும் தொலைக்காட்சியில் இப்படிப் பேசியுள்ளனர்.

அதனை பார்த்த மக்கள் ஹர்பஜன் இப்படித்தானோ, அனில் கும்ப்ளே, சச்சின் டெண்டுல்கர் இப்படித்தானோ என்றுதானே நினைப்பார்கள்? .

பாண்டியா அணிக்குள் வந்து எத்தனை நாட்கள் ஆகின்றன? அவர் எப்படி அணிக் கலாச்சாரம் பற்றியெல்லாம் பேச முடியும்? அவர்கள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது சரிதான். இதில் எனக்கு ஒரு ஆச்சரியமும் இல்லை. பிசிசிஐ மிகச் சரியான முடிவைதான் எடுத்துள்ளது" என்றார் அவர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close