முடிவு பண்ணிட்டா பேட்டை மீண்டும் எடுக்கமாட்டேன்: ஓய்வு குறித்து கோலி!

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 09:54 am
i-won-t-pick-up-bat-again-after-retirement-says-virat-kohli

ஓய்வு பெறவேண்டும் என்று ஒருமுறை முடிவு செய்துவிட்டால், பேட்டை மீண்டும் கையில் எடுக்கவேமாட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கிய நிலையில், நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த கோலி, "நான் ஓய்வு பெற்றுவிட்டால் திரும்பவும் பேட்டை கையில் எடுக்கமாட்டேன். நான் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திவிடுவேன். மீண்டும் வந்து விளையாட வேண்டும் என்றெல்லாம் திட்டமிடமாட்டேன். ஒருமுறை முடிவு செய்தால் அவ்வளவுதான். இதே கருத்தை எதிர்காலத்திலும் சொல்வேனா என்று தெரியாது. நான் ஓய்வுபெறும் போது நிச்சயம் நிறைய கிரிக்கெட் ஆடியிருப்பேன்" என்றார்.

மேலும், "ஏ பி டி வில்லியர்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கலம் இருவரும் ஓய்வுக்கு பிறகு டி20 போட்டிகளில் ஆடுகிறார்கள். ஆனால், நான் ஓய்வு பெற்றுவிட்டு ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் ஆடமாட்டேன்" என்றும் கோலி கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close