முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியாவுக்கு 289 ரன்கள் இலக்கு!

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 11:50 am
india-need-289-runs-to-win-first-odi

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 289 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மூன்று டி-20, 4 டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இந்தியா விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

அடுத்து நடந்த, 4 போட்டிகள் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது. அத்துடன், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 71 ஆண்டுகால காத்திருப்பை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீர்த்துள்ளது.

இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

தொடக்கம் முதல் அந்த அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 288 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹேண்ட்ஸ்காம் 73, கவாஜா 59, ஷான் மார்ஷ் 54 எடுத்திருந்தனர். 

இந்தியாவின் குல்திப் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close