இந்தியாவுக்கு 10 ஆயிரம் ரன்கள் அடித்த தல தோனி!

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 04:12 pm
ms-dhoni-joins-10-000-run-club-for-india-in-odis

இந்திய அணிக்காக 10 ஆயிரம் ரன்களை கடந்த 5வது வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். 

இந்தியாவின் ஒருநாள் போட்டிக்கான அணியில் முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் இணைந்துள்ளார்.  இன்று நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அடுத்தடுத்து முக்கிய விக்கெட்களை இழந்தது. இதனையடுத்து தோனி களமிறங்கி விளையாடி வருகிறார். 

பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி இந்தபோட்டியில் புதிய சாதனைப் படைத்துள்ளார். இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் அடித்தவர் என்ற பெறுமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் விராட் கோலி, சச்சின், கங்குலி மற்றும் டிராவிட் ஆகியோர் இந்த சாதனையை செய்திருந்தனர். 

282 போட்டிகளில் விளையாடி உள்ள தோனி, 9 சதங்கள், 67 அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும் சங்ககாராவுக்கு பிறகு 10 ஆயிரம் ரன்கள் கடந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெறுமையையும் அவர் பெற்றுள்ளார். 404 போட்டிகளில் விளையாடி உள்ள சங்ககாரா 14, 234 ரன்கள் அடித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close