ஹர்டிக், ராகுல் சர்ச்சை; கேள்வி கேட்டவருக்கு என்ன தண்டனை?

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 05:46 pm
are-hardik-and-rahul-the-only-ones-to-be-blamed

இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களை பற்றி மோசமான கருத்துக்களை தெரிவித்ததற்காக ஹர்டிக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கேள்வி கேட்ட கரண் ஜோகர் செய்த தவறுகளை பார்க்கலாம்...

சமீபத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஹர்டிக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் பங்குபெற்ற 'காஃபி வித் கரண்' இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியில் பேசியபோது, பெண்கள் தொடர்பாகவும், தங்களது டேட்டிங் வாழ்க்கை தொடர்பாகவும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து ஹர்டிக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

அதே நிகழ்ச்சியில் கே.எல் ராகுலும் பங்கு பெற்றாலும், ஹர்டிக் பாண்டியா தான் பெரும்பாலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வந்தார். உடனிருந்த பாவத்திற்காக, ராகுலுக்கு சேர்த்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் மூன்று போட்டிகளிலுமே விளையாட முடியாத நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.

இது குறித்து மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்ட ஹர்டிக் பாண்டியா, தான் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் சூழலில் கொஞ்சம் எல்லை மீறி விட்டதாக, கூறினார். நிகழ்ச்சியின் விடியோவை பார்க்கும் போது, அது உண்மைதான் என தெளிவாகிறது. தனக்கென ஒரு பேட்பாய், பிளேபாய் இமேஜை பாண்டியா உருவாக்கி வைத்திருந்ததாலும், அவரிடம் கிரிக்கெட்டை பற்றி கேட்டால், கிரிக்கெட்டை பற்றி மட்டுமே பதில் சொல்லியிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. டேட்டிங், பெண்களை எப்படி கரெக்ட் செய்வது, கன்னித்தன்மையை எப்போது இழந்தீர்கள் என்பது போன்ற கேள்விக்கு என்ன பதில் சொன்னாலும் நம்ம ஊரில் அது சர்ச்சை தான். 

எல்லோரும் ஹர்டிக் பாண்டியாவை குற்றம் சொல்கிறார்களே தவிர, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இயக்குனர் கரணை பற்றி யாரும் பேசவில்லை. 

உதாரணமாக, அவர் கேட்ட சர்ச்சைக்குரிய கேள்விகளில் ஒரு சில, "நைட் கிளப்களில் பெண்களின் பெயர்களை ஏன் நீங்கள் கேட்பது இல்லை?" என்று கேட்கிறார்.

ராகுலிடம், "சிறுவயதில் உங்கள் பர்ஸில் காண்டம் இருந்ததை உங்கள் பெற்றோர்கள் கண்டுபிடித்தார்களாமே?" என்று கேட்கிறார். அங்கு தொடங்கியதுதான், ஹர்டிக் பாண்டியா தனது கன்னித்தன்மையை இழந்தது பற்றி தனது பெற்றோர்களிடம் கூறி பெருமைப்பட்டதாகவும், அதை அவர்கள் ஜாலியாக எடுத்துக் கொண்டதாகவும் கூறி பெருமிதம் கொண்டார்.

மேலும், "நீங்கள் அனைவரும் ஒரே பெண்ணை குறி வைத்தீர்கள் என்றால் எப்படி முடிவெடுப்பீர்கள்?" என கேட்கிறார் கரண். அதற்கு ராகுல், "அது அந்த பெண்ணின் முடிவு" என்று கூறினார். பாண்ட்யாவோ "யாருக்கு திறமை இருக்கிறதோ அவருக்கு தான் அந்த பெண்" என்று கூறினார்.

இதுபோன்ற கமெண்ட்டுகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கேள்வி கேட்டவருக்கு எதிராக எந்த கூச்சலையும் இதுவரை பார்க்க முடியவில்லை. இளைஞர்களுக்காக, வடிவமைக்கப்படும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் கொஞ்சம் பொறுப்பான கேள்விகளை கேட்டால் இதுபோன்ற சர்ச்சைகள் ஏன் எழப்போகிறது?

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close