தோனி சீக்கிரமே களமிறங்க வேண்டும்: ரோஹித் ஷர்மா

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 01:10 am
dhoni-should-bat-higher-rohit-sharma

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முன்னாள் இந்திய கேப்டன் தோனி, இந்திய அணிக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவிய நிலையில், அவர் பேட்டிங் வரிசையில் சீக்கிரமாகவே களமிறங்க வேண்டும் என ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில், ஒரு கட்டத்தில் 4 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து மோசமான நிலையில் இருந்த இந்திய அணியை, ரோஹித் ஷர்மாவும், தோனியும் சிறப்பாக விளையாடி மீட்டனர். ரோஹித்  ஷர்மா சதம் அடித்த நிலையில் தோனி அரை சதம் அடித்தார்.

ஏற்கனவே, தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், தோனியின் ஆட்டத்தை பார்க்கும்போது, அவர் சீக்கிரமே களமிறங்க வேண்டும் என ரோஹித் ஷர்மா குறிப்பிட்டார்.

"என்னை பொறுத்தவரை தோனி 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். தற்போது அம்பதி ராயுடு 4வது இடத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார். அனால், இந்த முடிவை எடுக்க வேண்டியது, கேப்டனோ, பயிற்சியாளரோ தான்" என்றார்.

4வது இடத்தில் அம்பதி ராயுடு தான் பேட் செய்வார் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ள நிலையில், ரோஹித் ஷர்மா இவ்வாறு தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார். இதற்கிடையே, 96 பந்துகளில் 51 ரன்கள் அடித்த தோனி, மிகப் பொறுமையாக விளையாடியதாகவும், பந்துகளை வீணடித்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதை ரோஹித் ஷர்மா மறுத்துள்ளார். "பொதுவாக தோனியின் பேட்டிங்கை பார்த்தீர்கள் என்றால் அவர் 90% ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பார். ஆனால் இன்றைய நிலை வேறு. இன்று 4/3 விக்கெட்டை இழந்து இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணி இருந்தது. அதனால் நானும் தோனியும் சேர்ந்து பொறுமையாக விளையாடி, நீண்ட நேரத்துக்கு பார்ட்னர்ஷிப்பை கொடுக்கவேண்டும் என முடிவெடுத்தோம். அதனாலேயே அதிகமான டாட் பால்கள் எடுக்க வேண்டியதாக இருந்தது. என்னாலும் மற்ற நாட்களைப்போல ரன்களை குவிக்க முடியவில்லை. நாங்களும் அவசரப்பட்டு, எங்கள் விக்கெட் விழுந்திருந்தால், அங்கேயே போட்டி முடிந்திருக்கும்" என்றார் ரோஹித் ஷர்மா.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close