ராகுல், பாண்டியாவுக்கு மாற்றாக களமிறங்கும் விஜய் சங்கர், சுப்மன் கில்!

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 08:08 am
cricket-vijay-shankar-shubman-gill-to-replace-kl-rahul-hardik-pandya-in-odi-side

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றும் வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் மற்றும் அடுத்து வரவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டி 20  மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில், இந்திய அணியில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்த்திக் பாண்டியாவுக்கு மாற்றாக விஜய் சங்கர், சுப்மன் கில் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.

இவர்களில் விஜய் சங்கர், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் 15 பேர் பட்டியலில்  ஏற்கெனவே இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்துவரும் இளம் வீரர்களான ராகுலும், பாண்டியாவும் சமீபத்தில் பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், அணியின் நற்பெயரை கெடுக்கும் விதத்தில் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close