காபி வித் கரண் சர்ச்சை: விளம்பர ஒப்பந்தத்தை இழந்தார் பாண்ட்யா

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 01:20 pm
gillette-ends-ties-with-hardik-pandya

தொலைக்காட்சி நிகழ்ச்சியால் சர்ச்சையில் சிக்கிக்கொண்ட ஹர்திக் பாண்ட்யா உடனான ஒப்பந்தத்தை ஜில்லட் நிறுவனம் ரத்து செய்தது. 

காபி வித் கரண் நிகழ்ச்சியில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும், அதனைப் பற்றி தனது வீட்டில் வெளிப்படையாக பேசுவதையும் பற்றி ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.  இது குறித்து பிசிசிஐயிடம் இருந்து பாண்டியா மற்றும் ராகுலுக்கு எச்சரிக்கை அனுப்பபட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டார். மேலும் அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பேசியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பாண்ட்யா சார்பில் பதில் அளிக்கப்பட்டது. 

இந்நிலையில் பாண்ட்யா மற்றும் கே. எல்.ராகுலை 2 தொடர்களில் விளையாடுவதற்கு தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து ஆஸ்திரேலியாவில்  நடைபெற்றுக் கொண்டிருந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இருவரும் இந்தியா திரும்பினர். 

இதனையடுத்து தற்போது ஜில்லட் நிறுவனம் ஹர்திக் பாண்ட்யா உடனான விளம்பர ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா சமீபத்தில் கூறியுள்ள கருத்துக்களுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. அவருடனான எங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம் என ஜில்லட் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close