2 ஓவர்கள் மட்டுமே வீசி சிக்கலில் மாட்டிக்கொண்ட ராயுடு

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 03:35 pm
rayudu-has-been-reported-for-suspect-bowling-action-after-the-first-odi

சிட்னி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அம்பத்தி ராயுடு விதிமுறைகளை மீறி பந்துவீசினாரா என்பதை அறிய சோதனை நடத்த வேண்டும் என்று ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசியது. அப்போது 2 ஓவர்களை அம்பத்தி ராயுடு வீசினார். அவர் பந்துவீசும் முறை ஐசிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு இல்லை என்று பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில் அவர் பந்து வீசும் முறையை சோதனை செய்ய வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது. அடுத்த 14 நாட்களுக்குள் இந்த சோதனை நடக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. முத்தையா முரளிதரனுக்கு நடத்திய சோதனை போல ராயுடுவுக்கு சோதனை நடைபெற உள்ளது. 

ஐசிசியின் விதிமுறைகளின் படி பந்தை பவுளிங் செய்யாமல் தூக்கி எறிவது விதிமீறலாகும். இதில் அவர் விதிமீறி உள்ளார் என்பது நிரூபனமானாள் சஸ்பெண்ட் செய்யப்படுவார். இதனால் இந்தியாவின் முதல் 6 வீரர்கள் பவுளிங் செய்ய முடியாது என்ற நிலை ஏற்படும். இது கேப்டன் கோலிக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தும். 

குறிப்பாக ஹர்திக் பாண்ட்யா போன்ற ஆல்ரவுண்டர் அணியில் இல்லாத இந்த நேரத்தில் ராயுடு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்தியாவின் மிடில் ஆர்டர் கேள்விக்குள்ளாகும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close