மாரடைப்பு: கிரிக்கெட் வீரர்கள் இருவர் மரணம்!

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 10:03 pm
two-cricketers-die-of-heart-attack-suffered-during-match

கோவா மற்றும் மகாராஷ்டிரத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற இரு வீரர்கள், போட்டியின்போதே மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 கோவா மாநிலத்தைச்  சேர்ந்த  ரஞ்சி கோப்பை  கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராஜேஷ் கோட்ஜி. 47  வயதான இவர், மடக்கான்  கிரிக்கெட் கிளப் சார்பில்  நடத்தப்பட்டு வரும் கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தார்.

விக்கெட்டின் எதிர்முனையில் நின்றுக் கொண்டிருந்தபோது,  அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு,  நிலைகுலைந்து மைதானத்தில் சரிந்து விழுந்தார். முதலுதவி அளிக்கப்பட்டு, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதேபோன்று, மகாராஷ்டிரத்தின் நவி மும்பை பகுதிக்குட்பட்ட கன்சோலி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது வந்தது. இதில், 36 வயதான சந்தீப் சந்திரகாந்த் மாத்ரே எனும் வீரர் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடி வந்தார்.

போட்டியில் பந்து வீசிக் கொண்டிருந்தபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.  உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாலும், அவரது உயிரை காப்பாற்ற இயலவில்லை.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close