சச்சினுடன் கோலியை ஒப்பிட்ட ஆஸ்திரேலிய பயிற்சியாளர்!

  Newstm Desk   | Last Modified : 16 Jan, 2019 05:30 am
australian-coach-compares-kohli-to-sachin

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய கேப்டன் விராட் கோலியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் விராட் கோலியின் அதிரடி சதத்தால் இந்தியா வெற்றி பெற்றது. இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், விராட் கோலியை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, "என்னைப் பொறுத்தவரை இருவருமே எனது அணியில் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சச்சின் விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு அற்புதமான வீரர். அவர் விளையாடுவது தியானம் செய்வது போல இருக்கும். மிகவும் பொறுமையாக, நிதானமாக விளையாடுபவர். அதனால்தான் அவரது சாதனையை தொடுவதற்கு இன்றும் ஆளில்லை. 

விராட் கோலியும் அதேபோலத்தான். நிதானமாக, அதே நேரம் ஆக்ரோஷமாக விளையாடும், சிறந்த ஆற்றல் கொண்ட வீரரும் ஆவார். 360 டிகிரியிலும் அவர் சுற்றி சுற்றி அவர் ரன் குவிக்கும் விதம் மிகவும் அற்புதமானது" என்று பாராட்டினர்.

மேலும், சரித்திரத்திலேயே சிறந்த வீரர்களான கோலி மற்றும் தோனி போன்றோரிடம் இருந்து, தற்போதைய ஆஸ்திரேலிய வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல இருப்பதாகவும் லாங்கர் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close