3வது ஒருநாள் போட்டிக்கான ஆஸி. அணி அறிவிப்பு: நாதன் லயன் நீக்கம்

  Newstm Desk   | Last Modified : 17 Jan, 2019 12:46 pm
australia-announce-playing-xi-for-3rd-odi

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஓருநாள் போட்டியில் ஆடும் பதினோறு பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடர் சமனில் முடிந்தது. இதனையடுத்து நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. தற்போது 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டியில் கேப்டன் கோலி மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றிப்பெற்றது. 

இந்நிலையில் நாளை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 3வது மற்றும் கடைசி ஓருநாள் போட்டி நடக்க இருக்கிறது. தொடரை வெல்லப்போகும் அணி எது என்று தீர்மானிக்கும் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அந்த அணியின் நாதன் லயன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆடம் சம்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் முதுகு வலி காரணமாக ஜேசன் பெஹரென்டோர்ஃப் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

அணி விவரம்: ஆரோன் பின்ச், அலெக்ஸ் கேரி, உஸ்மன் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹாண்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டோயினிஸ், க்ளென் மாக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், பீட்டர் சிட்டெல், ஆடம் சம்பா, பில்லி ஸ்டான்லேக்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close