அணிக்காக எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயார்: ஆட்டநாயகன் விருதுப் பெற்ற தோனி

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 08:26 am
dhoni-post-match-speech

அணிக்காக எந்த இடத்திலும் களமிறங்கி விளையாடத் தயார் என்று ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதுப் பெற்ற பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார். 

விருதுப்பெற்ற பின் பேசி தோனி, "4 அல்லது 6 என எந்த இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது மகிழ்ச்சியே. ஆட்ட சூழ்நிலைக்கு ஏற்ப இடத்தை மாற்றிக் கொள்ளும்போது, அணியின் வலிமையை சமமாக வைத்துக் கொள்வது முக்கியமானது. 14 வருடத்திற்குப் பிறகு நான் 4வது இடத்தில் களம் இறங்க விரும்புகிறேன். அல்லது 6வது இடத்தில் களம் இறங்கி விளையாட விரும்புகிறேன் என்று என்னால் சொல்ல இயலாது. 

ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் ஒரு பக்கத்தில் நிலைத்து நிற்பது முக்கியம் என்று நினைத்தேன். ஏனென்றால், முக்கியாமான பந்து வீச்சாளர்கள் அவர்களது 10 ஓவர்களை முடிக்க வேண்டும். கேதர் ஜாதவ், கிரிக்கெட்டிற்கு தொடர்பிள்ளாத ஷாட்ஸ் மூலம் பவுண்டரிகள் விளாசினார்’’ என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close