மதிப்பிட முடியாத வீரர் தோனி: சுனில் கவாஸ்கர்

  Newstm Desk   | Last Modified : 19 Jan, 2019 09:39 am
he-s-still-tremendous-value-to-the-team-sunil-gavaskar-says-ms-dhoni-s-importance

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மதிப்பிட முடியாத அபார வீரர் என்று முன்னாள் அதிரடி வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

கடந்த சில மாதங்களாக தோனியின் ஃபார்ம் குறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய தோனி அடுத்தடுத்து அரைசதம் அடித்து இந்திய அணி தொடரை வெல்ல முக்கிய பங்காற்றி உள்ளார். 

தற்போது கிரிக்கெட் உலகமே தோனியை தற்போது புகழ்ந்து வரகிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரும் தோனியை புகழ்ந்துள்ளார். 

அவர் பேசும் போது, "தோனியை அவர் போக்கில் விளையாடவிடுங்கள் என்பது தான் எனது பெரிய கோரிக்கையாக இருக்கிறது. ஒருவர் இளம் வயதில் இருக்கும் போது வெளிப்படுத்திய ஆட்டத்தை இப்போதும் வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியாக இருக்காது. தோனி நாளுக்கு நாள் இளமையாகிக் கொண்டே போவார் என்று எதிர்பார்க்க முடியாது. 

அவரது நிலையற்ற ஆட்டத்தை நாம் பொறுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். ஆனால் அணிக்கு அவர் ஏன் முக்கியம் என்பதை நம்மால் கணக்கிடவே முடியாது. 

மேலும் பேட்ஸ்மேன் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்து அவர் பந்துவீச்சாளர்களுக்கும் அறிவுரைகள் அத்தை முக்கியமான ஒன்றாக இருக்கிறது" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close