சச்சினின் சாதனையை முறியடிப்பாரா தோனி?

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 01:14 pm
will-dhoni-breaks-the-record-of-sachin

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில், தொடர்ந்து, மூன்று அரை சதங்கள் அடித்து, ரசிகர்களுக்கு விருந்து படைத்த தோனி, அடுத்ததாக, நியூசிலாந்தில் நடக்கவுள்ள போட்டிகளில், சச்சினின் சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து நாட்டில் நடக்க உள்ள ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளது. நியூசிலாந்தில் நடந்த ஒரு நாள் போட்டி தொடரில், இந்திய அணியை சேர்ந்த வீரர் ஒருவர், அதிகபட்சமாக, 652 ரன்கள் எடுத்ததே, இதுவரை சிறந்த சாதனையாக உள்ளது. 

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த, முன்னாள் கிரிக்கெட் வீரர், சச்சின், நியூசிலாந்து மண்ணில் நடந்த ஒருநாள் போட்டி தொடர்களில், 18 போட்டிகளில் பங்கேற்று, 652 ரன்கள் எடுத்துள்ளார். அவரை அடுத்து, முன்னாள் வீரர், சேவாக், 12 போட்டிகளில், 598 ரன்கள் எடுத்துள்ளார். 

இவர்கள் இருவருக்கு அடுத்தபடியாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி, 10 போட்டிகளில், 456 ரன்கள் எடுத்துள்ளார். இவர், நியூசிலாந்தில் நடைெறவுள்ள போட்டிகளில், 197 ரன்கள் எடுத்தால், சச்சினின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலிய தொடரில், அடுத்தடுத்து, மூன்று அரை சதங்கள் அடுத்த தோனி, இந்த சாதனையையும் படைப்பார் என்ற நம்பிக்கையில், அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிபார்த்து காத்திருக்கின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close