‛மேற்கிந்திய தீவுகளை போல் செயல்படுகிறது இந்திய அணி!’

  Newstm Desk   | Last Modified : 21 Jan, 2019 04:49 pm
dean-jones-compared-indian-cricket-team-with-westindies

ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டிற்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது.

உலகின் பல நாடுகளை சேர்ந்த வீரர்கள், இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன், டீன் ஜோன்ஸ், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை புகழ்ந்து தள்ளியுள்ளார். 


இது குறித்து, டீன் ஜோன்ஸ் கூறுகையில், ‛ கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மிக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, சஹால், குல்தீப் ஆகியோர் தங்கள் திறமையை அழகாக வெளிப்படுத்தி உள்ளனர். இளம் வீரர்கள் நிறைந்த இந்த அணியில், தோனியும் பார்முக்கு திரும்பியுள்ளார்.

இதை பார்க்கும் போது, 1980 களில், மேற்கிந்திய தீவுகள் அணி, கிரிக்கெட்டில் எப்படி ஆதிக்கம் செலுத்தியதோ, அதே போல், இந்திய அணி தற்பாேது ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

 ஒவ்வொரு வீரரும் தங்களுக்குரிய பங்களிப்பை அளவுக்கு அதிகமாகவே வெளிப்படுத்தி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், வரும் உலக கோப்பை போட்டித் தொடரில், யாரை சேர்ப்பது, யாரை ஒதுக்குவது என முடிவெடுக்க முடியாமல் போகும். 

அந்த அளவுக்கு, தற்போதைய இந்திய அணி வலுவாக உள்ளது’ என அவர் கூறினார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close