ஐசிசி ஒருநாள் அணி: கோலி கேப்டன், 4 இந்தியர்களுக்கு இடம்

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 11:13 am
icc-announced-odi-team-of-the-year

இந்தாண்டு சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் ஒருநாள் போட்டி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியே தலைமையாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் 3 இந்தியர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். 

வருடாவருடம் இதே போன்று சிறந்த வீரர்களை கொண்ட அணியை ஐசிசி அறிவிப்பது வழக்கம். இந்த ஆண்டில் கிரிக்கெட் உலகமே வியக்கும் அளவிற்கு விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஐசிசி அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

 

— ICC (@ICC) January 22, 2019

 

மேலும் இந்த அணியில் ரோகித் சர்மா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். மேலும் இங்கிலாந்து அணியின் ஜானி பைர்ஸ்ட்வ், ஜோ ரூட், பென் ஸ்ட்ரோக்ஸ், ஜாஸ் பட்லரும் ஆஸ்திரேலிய அணியின் ராஸ் டெய்லர், வங்கதேச அணியில் முஸ்தஃபிசூர் ரஹ்மான் மற்றும் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close