ரிஷப் பன்ட் தான் அடுத்த கில்க்ரிஸ்ட்: பாண்டிங் புகழாரம்

  Newstm Desk   | Last Modified : 22 Jan, 2019 05:45 pm
rishab-pant-is-another-gilchrist-ponting

இந்திய அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்டுக்கு, ஐசிசி 2018ன் வளர்ந்து வரும் வீரர் என்ற விருதை வழங்கி கவுரவித்த நிலையில், அவரை ஆடம் கில்க்ரிஸ்ட்டுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவன் ரிக்கி பாண்டிங்.

இளம் இந்திய வீரர் ரிஷப் பன்ட், குறுகிய காலத்திலேயே சர்வதேச போட்டிகளில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். 21 வயதேயான அவர், இந்திய நட்சத்திர கேப்டன் தோனியின் இடத்தை அதிரடி பேட்டிங்கிலும், கீப்பிங்கிலும் எளிதாக நிரப்பியுள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 350 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் பன்ட். ஐசிசி-யின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் பெற்று அசத்தியுள்ளார் பன்ட்.

இந்நிலையில், பன்ட்டை பற்றி பேசிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங், "பன்ட் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். போட்டியின் நிலைப்பாட்டை பற்றி நன்றாக அறிந்து வைத்துள்ளார். வருங்காலத்தில் பல டெஸ்ட் போட்டிகளில் அவரது பங்கு இருக்குமென நம்புகிறேன். கீப்பிங்கிலும், பேட்டிங்கிலும் மேலும் அவர் முன்னேற்றமடைவர் என்பதில் சந்தேகமில்லை" என்று கூறினார். 

இந்திய நட்சத்திர வீரர் தோனி மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவன் ஆடம் கில்க்ரிஸ்ட் ஆகியோருடனும், பன்ட்டை ஒப்பிட்டு பாராட்டினார் பாண்டிங். "நாம் கிரிக்கெட்டில் தோனியின் தாக்கத்தை பற்றி அடிக்கடி பேசுகிறோம். ஆனால், அவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். பன்ட் அதைவிட அதிக சதங்கள் நிச்சயம் அடிப்பார். அவரும் மற்றொரு ஆடம் கில்க்ரிஸ்ட்டை போல தான்" என்று புகழாரம் சூட்டினார் பாண்டிங்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close