பேபி சிட்டர் ரிஷப் பண்ட்டுக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த ஐசிசி

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 08:36 am
icc-s-tribute-to-champion-babysitter-and-champion-cricketer-rishabh-pant

ஐசிசியின் வளர்ந்து வரும் வீரர் என்ற விருதைப் பெற்ற் ரிஷப் பண்ட்டை பாராட்டு வகையில் ஓவியம் ஒன்று வெளியாகி உள்ளது. 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியாவின் இளம் வீரர் ரிஷப் பண்ட் வளர்ந்து வரும் வீரர் என்ற விருதைப் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடினார். குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியில் 159 ரன்கள் எடுத்திருந்தார். 

கடந்தாண்டு 8 டெஸ்ட் போட்டிகளில் பண்ட் விளையாடி உள்ளார். அதில் அவர் 537 ரன்கள் அடித்திருந்தார். மேலும் 40 கேட்ச்கள் பிடித்துள்ளார். தோனிக்கு மாற்றாக தற்போதைய நிலையில் இருக்கும் ஒரே வீரர் இவர் தான் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் ரிஷப் பண்ட்டை பாராட்டும் வகையில் ஐசிசி ஓவியம் ஒன்றை வெளியாகி உள்ளது. அதில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன்னின் குழந்தைகளை ரிஷப் பண்ட் கையில் வைத்திருப்பது போல காட்டப்பட்டுள்ளது. 

 

 

முன்னதாக டெஸ்ட் தொடரின் போது ரிஷப் பண்ட்டை பேபி சிட்டர் என்று டிம் கூறினார். இது இணையத்தில் வைரலானதை அடுத்து ஐசிசி தற்போது இந்த ஓவியத்தை வெளியிட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close