இந்தியாவிடம் சுருண்டது: 157 ரன்களில் நியூசிலாந்து அணி ஆல்அவுட்

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 10:57 am
nz-157-all-out-38-0-ovs

மெக்லீன் பார்க்கில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பவுளர்களின்  அதிரடியான பந்து வீச்சில் சிக்கி 157 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்து அணி ஆல்அவுட் ஆனது. 

ஆஸ்திரேலிய மண்ணில் சாதனைப் படைத்த இந்திய அணி அடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட  இந்த தொடர் இன்று தொடங்கியது. 

முதல் ஒருநாள் போட்டி நப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்கம் முதல் இந்திய பந்துவீச்சாளர்களின் கையே ஓங்கி இருந்தது. குறிப்பாக முகமது ஷமி அதிரடியாக பவுளிங் செய்தார். இவர் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்டின் குப்தில் மற்றும் கொலின் முன்ரோ ஆகியோரின் விக்கெட்டை எடுத்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் விக்கெட்டை இழக்க அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் மட்டும் நின்று விளையாடி அதிகபட்சமாக 64 ரன்கள் சேர்த்தார்.

 

 

இந்திய அணியின் குல்திப் யாதவ் 4, முகமது ஷமி 3, சாஹல் 2 மற்றும் கேதர் ஜாதவ் 1 விக்கெட்களை எடுத்திருந்தனர். தற்போது 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close