அதிக வேக 100 விக்கெட்கள்: ஒருநாள் போட்டியில் ஷமி சாதனை

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 11:52 am
100-odi-wickets-and-counting-for-shami

இந்திய அணியின் பந்து வீச்சாளர் முகமது ஷமி மிகக் குறைந்த அளவிலேயே ஒருநாள் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்கள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பந்து வீச்சாளர்களின் திறமையான பவுளிங் காரணமாக நியூசிலாந்து அணி சுருண்டது. 

இந்த போட்டியில் இந்திய அணியின் முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் மிக குறைந்த அளவிலேயே ஒருநாள் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்கள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் இந்த இலக்கை எட்ட வெறும் 56 போட்டிகள் மட்டுமே தேவைப்பட்டுள்ளது. இதற்கு முன் பதான் 59 போட்டிகளில் இந்த இலக்கை எட்டி உள்ளார்.

 

 

மேலும் சாஹீர் கான் 65 போட்டிகளிலும், அஜித் அகர்கர் 67 போட்டிகளிலும் ஜவகல் -நாத் 68 போட்டிகளிலும் இந்த இலக்கை எட்டி உள்ளனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close