கிரிக்கெட்டில் இதை கேள்விப்பட்டு இருக்கீங்களா?... சூரிய ஒளியால் ஆட்டம் நின்றது

  Newstm Desk   | Last Modified : 23 Jan, 2019 12:20 pm
sun-stops-play-at-naiper

சூரிய ஒளியால் நியூசிலாந்தில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் சூரிய ஒளியால் தற்போது போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வினோத காரணத்திற்காக போட்டி நிறுத்தப்பட்டது இதுதான் முதல் முறை என்று கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.

 

— ICC (@ICC) January 23, 2019

 

பொதுவாக ஒரு கிரிக்கெட் மைதானம் வடக்கு-தெற்கு என்ற திசையில் தான் அமைக்கப்படும். ஆனால் இந்த மெக்லீன் பார்க் கிரிக்கெட் மைதானம் கிழக்கு- மேற்கு என்ற திசையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பந்துவீச்சாளர் பந்தை வீசும் போது சூரிய ஒளி பேட்ஸ்மேன் கண்ணில் படுவதால் பந்து வருவது தெரியாது. இதனால் தற்போது போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இப்படியா மைதானத்தை அமைப்பார்கள் என்று பலரும் நியூசி கிரிக்கெட் வாரியத்தை சமூக வலைதளங்களில் கடிந்து வருகின்றனர். 

மேலும் நடுவர் மற்றும் வீரர்களின் நலனை மனதில் கொண்டு போட்டி நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், விரைவில் சாதகமான சூழல் வந்த உடன் மீண்டும் போட்டி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 158 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனை அடுத்து இந்திய அணி தற்போது பேட்டிங் செய்துக்கொண்டு இருந்தது. 

newsmt.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close