களத்தில் நின்று ஆடினால் தவான் எதிரணிக்கு மிகவும் ஆபத்தான போட்டியாளராக மாறிவிடுவார் என்று கேப்டன் கோலி கூறினார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை இந்திய அணி கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு பின் பேசிய கேப்டன் கோலி, "இது மிகவும் பேலன்ஸான ஆட்டம். பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டனர். டாஸில் தோல்வியடைந்த போது 300க்கு மேல் இலக்கு இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பந்துவீச்சாளர்கள் அது நடக்காமல் பார்த்துக் கொண்டனர்.
இதுபோன்ற பிட்ச்சில் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது கடினமான விஷயம். ஷமியும் அணியில் இருக்கும் சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். தவானுக்கு இது மிகவும் முக்கியமான போட்டி.
சூரிய ஒளியால் ஆட்டம் தடைப்பட்ட போது நாங்கள் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது, இந்த போட்டியை தான் நின்று முடித்தால் உத்வேகமாக இருக்கும் என்று அவர் கூறினார். அவர் களத்தில் நின்று ஆடினால் எதிரணிக்கு மிகவும் ஆபத்தான போட்டியாளராக மாறிவிடுவார்" என்றார்.
மேலும் இதுவரை சூரிய ஒளியால் ஆட்டம் நின்று தான் பார்த்ததில்லை என்று கூறிய கோலி, 2014ம் ஆண்டு தனக்கும் இது போன்ற பிரச்னை வந்தது என்றும் அப்போது இந்த விதிகள் இல்லை என்றும் கூறினார்.
newstm.in