4 நாடுகளில் சதம்: ஸ்மிரித்தி மந்தனா புதிய சாதனை!

  Newstm Desk   | Last Modified : 25 Jan, 2019 01:23 pm
smriti-mandhana-becomes-1st-indian-women-s-cricketer-to-score-centuries-in-sena-nations

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரித்தி மந்தனா SENA நாடுகள் அனைத்திலும் சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். 

நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் இந்திய ஆண்கள் அணி முதல்ஒருநாள் போட்டியில் வென்றது போல மகளிர் அணியும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி உள்ளது. 

நேபியரில் உள்ள மெக்லீன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் ஸ்மிரித்தி மந்தனா 105 ரன்கள் எடுத்து அசத்தினார். இதன் மூலம் புதிய சாதனை ஒன்றை அவர் படைத்துள்ளார். 

SENA நாடுகள் என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அளவில் இங்கிலாந்தின் க்ளைர் டெய்லருக்கு பிறகு அடித்த இரண்டாவது வீரர் இவர் தான். 

இது மந்தனாவின் 4வது ஒருநாள் கிரிக்கெட் சதமாகும். இவர் தனது முதல் சதத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அடித்தார். இதுவரை 45 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள மந்தனா 1707 ரன்கள் அடித்துள்ளார். அவரது சராசரி 40.64ஆக இருக்கிறது. இதில் 4 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடக்கம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close