அதிரடி காட்டிய இந்திய பேட்ஸ்மேன்கள்: நியூசிக்கு 325 ரன்கள் இலக்கு

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 11:14 am
2nd-odi-update

நியூசிலாந்தில் மவுண்ட் மவுன்கனேய்-ல் உள்ள ஓவல் பே மைதானத்தில் இன்ற இந்திய அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் எடுத்தது.

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 87 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதே போல சிக்கர் தவான், விராட் கோலி, அம்பத்தி ராயுடு,  தோனி என அனைவரும் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக 10 பந்துகளில் கேதர் ஜாதவ் 22 ரன்கள் எடுத்து அசத்தினார்.

பேட்ஸ்மேன்களின் அதிரடியால் இந்திய அணி 324 ரன்கள் எடுத்தது. பேட்டிங்கிற்கு மிகவும் ஏற்புடைய பிட்ச் என்பது கூட இந்திய அணியின் அதிரடிக்கு காரணம் என்று கூறலாம். நியூசிலாந்து அணியின் டிரெண்ட் பவுல்ட் 2 விக்கெட்களும், லாக்கி பெர்குசன் 2 விக்கெட்களும் எடுத்தனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close