நியூசி.,க்கு எதிரான 2வது போட்டியிலும் இந்தியா வெற்றி

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 03:05 pm
india-won-by-90-runs-against-nz

நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டிற்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில், 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

நியூசிலாந்தின் பே ஓவல் மைதானத்தில், இன்று நடந்த இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 4 விக்கெட் இழப்பிற்கு, 324 ரன்கள் எடுத்தது. 

அதிகபட்சமாக, துவக்க ஆட்டக்காரர், ரோஹித் சர்மா, 87 மற்றும் ஷிகர் தவான், 66 ரன்கள் எடுத்தனர். கேப்டன் கோலி, 43; ராய்டு 47 ரன்கள் எடுத்தனர். விக்கெட் கீப்பர் தோனி, கடைசி வரை ஆட்டம் இழக்காமல், 48 ரன்கள் எடுத்தார். 

இதையடுத்து, 325 ரன்கள் என்ற வெற்றி இலக்கை அடைவதற்காக களம் இறங்கிய நியூசிலாந்து வீரர்கள், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியின் பிராஸ்வெல் அதிகபட்சமாக, 57 ரன்கள் எடுத்தார். இறுதியில், 40.2 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, நியூசிலாந்து அணியினர், 234 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 

இந்திய அணி தரப்பில், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சஹால் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா, 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஜாதம் மற்றும் ஷமிக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது. 

இதையடுத்து, இரண்டாவது போட்டியில், இந்திய அணி, 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொத்தம், 5 போட்டிகள் கொண்ட தொடரில், 2 - 0 என்ற கணக்கில், இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close