வெற்றிக்கு காரணம் அட்டகாசமான பவுலிங்: கோலி புகழாரம்

  Newstm Desk   | Last Modified : 26 Jan, 2019 08:20 pm
kohli-lauds-indian-bowling-after-2nd-odi-victory

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றதற்கு, இந்திய பவுலர்களின் சிறப்பான பெர்பார்மன்ஸே காரணம் என இந்திய கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் வெற்றிவாகை சூடிய இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணி அபாரமாக விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், இந்திய அணி, 90 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி, 4 விக்கெட் இழந்து 324 ரன்கள் அடித்தது. அதைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணியை 234 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் செய்தது. பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினாலும், இந்தியாவின் வெற்றிக்கு பவுலர்கள் தான் காரணம் என கோலி பாராட்டினார்.

"மீண்டும் ஒரு அசத்தலான பெர்பார்மன்ஸ். இந்த பிட்ச்சை பொறுத்தவரை, நாங்கள் அடித்த ஸ்கோர் எதிரணி எடுக்கக்கூடியது தான். ஆனால், சிறப்பாக பந்து வீசி அவர்களை பவுலர்கள் வீழ்த்திய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த நிலையிலும் பந்துவீசவும், விக்கெட் எடுக்கவும் எங்கள் பந்துவீச்சாளர்கள் ரெடியாக உள்ளார்கள். 40 ரன்கள் மட்டுமே கொடுத்தால் போதும், விக்கெட் எடுக்க வேண்டாம் என்ற மனநிலை அவர்களுக்கு இருப்பதில்லை. 60 ரன் கொடுத்தாலும் பரவாயில்லை என விக்கெட் எடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இது அணிக்கு மிகவும் முக்கியம்" என்றார் கோலி.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close