ஐசிசி நடவடிக்கை: பாகிஸ்தான் கேப்டன் 4 போட்டிகளில் விளையாட தடை!

  Newstm Desk   | Last Modified : 27 Jan, 2019 05:22 pm
icc-hands-pakistan-captain-sarfraz-ahmed-four-match-suspension-for-racist-taunt

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமது 4 போட்டிகளில் விளையாட தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. டர்பனில்  நடந்த 2வது போட்டியில் தென்னாப்ரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

அந்த போட்டியில்  தென்னாப்ரிக்க வீரர் பெலுக்வாயோவை பார்த்து நிறவெறியைத் தூண்டும் விதமாக பாகிஸ்தான் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சர்ஃபராஸ் அகமது பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்த சம்பவத்தை கண்டித்து சர்வதேச அளவில் கடும் விமர்சனங்கள் வந்தன.

பின்னர், பெலுக்வாயோவை நேரில் சந்தித்த சர்ஃபராஸ், நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்டார். அதனை ஏற்றுக்கொண்ட பெலுக்வாயோ, அவரை மன்னித்துவிட்டதாக கூறினார். இந்நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ்  4 போட்டிகளில் விளையாட தடை விதித்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால், தென்னாப்ரிக்காவுக்கு எதிரான கடைசி 2 ஒரு நாள் மற்றும் 2 டி-20 போட்டிகளில் சர்ஃபராஸ் விளையாட மாட்டார். அவருக்குப் பதிலாக சோயப் மாலிக் அணியை வழிநடத்துவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close