நியூஸிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா; தொடரை வென்று சாதனை!

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 02:56 pm
india-beat-new-zealand-clinch-series

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

நியூஸிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், தொடரை கைப்பற்றும் நோக்கில் 3வது போட்டியில் களமிறங்கியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 243 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் 93 ரன்களும், லேதம் 51 ரன்களும் அடித்தனர். இந்திய தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ஷமி 3 விக்கெட்களும், புவனேஷ்வர் குமார், சஹல், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் எடுத்தனர். 

பின்னர், களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட் மட்டுமே இழந்து 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் ஷர்மா 62 ரன்களும், கேப்டன் விராட் கோலி 60 ரன்களும் விளாசினர்.இந்த வெற்றியை தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என வென்று சாதனை படைத்துள்ளது.  

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close