தோனியின் சூப்பர் சிக்ஸர் சாதனையை சமன் செய்தார் ரோஹித் ஷர்மா!

  Newstm Desk   | Last Modified : 28 Jan, 2019 09:15 pm
rohit-sharma-equals-dhoni-s-sixer-record

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் 62 ரன்கள் விளாசிய இந்திய துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, அதிக சிக்ஸர்கள் அடித்த முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா 77 பந்துகளில் 62 ரன்கள் அடித்து அசத்தினார். 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் ரோஹித் ஷர்மா தோனியின் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார். 
337 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 215 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அந்த சாதனையை, 199 போட்டிகளிலேயே ரோஹித் ஷர்மா சமன் செய்துள்ளார்.

அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 66 சிக்ஸர்களை அடித்துள்ளார் ரோஹித். இதுமட்டுமில்லாமல், இன்று ரோஹித் ஷர்மாவின் அரைசதத்தை தொடர்ந்து, வேகமாக 10,000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளார். முதல் 3 இடங்களில், கோலி, கங்குலி மற்றும் டெண்டுல்கர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close