எங்கு தவறு நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும்: ரோஹித் ஷர்மா

  Newstm Desk   | Last Modified : 31 Jan, 2019 02:53 pm
everyone-knows-what-went-wrong-rohit-sharma

இந்த போட்டியில் என்ன தவறாக நடந்தது என்று அனைவருக்கும் தெரியும் என்றும் அடுத்த போட்டிக்காக காத்திருப்பதாகவும் இந்திய அணியின் தற்காலிக கேப்டன்  ரோஹித் ஷர்மா நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வி குறித்து கூறினார். 

ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. போல்ட் 5 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். 

போட்டிக்கு பின் பேசி இந்திய அணி கேப்டன்  ரோஹித் ஷர்மா, "பல நாட்களுக்கு பிறகு இந்திய அணியின் மோசமான பேட்டிங் இது. நியூசிலாந்து பந்துவீச்சாளரக்ள் சிறப்பாக செயல்பட்டனர். கடினமான பிட்ச்சில் பேட்டிங் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. 

நாங்கள் நிதானமாக ஆட தவறிவிட்டோம். சில மோசமான ஷாட்களை விளையாடினோம். பந்து சுழலும்போது பேட்டிங் செய்வது கடினம். எந்த அணியாக இருந்தாலும் இதான் நிலை. 

எது தவறாக மாறிவிட்டது என்பது பற்றி எனக்கு தெரியும். தொடரை வென்றதால் ஆசுவாசப்படுத்திக் கொள்ளமுடியாது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அடுத்த போட்டிக்காக காத்திருக்கிறோம்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close