உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது மிகக் கடினம்: ஐசிசி தலைவர்

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 02:23 am
can-t-predict-a-world-cup-winner-icc-ceo

2019 ஐசிசி உலகக்கோப்பை இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது மிக கடினம் என ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.  

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது. உலக கோப்பையையும், கோக கோலா நிறுவனத்துடனான கூட்டணியையும் அறிவிக்கும் விழா நேற்று குர்கிராமில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சர்ட்சன், உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது மிக கடினம் என்று கூறினார்.

இதுகுறித்து அவர் பேசியபோது, "வெற்றி பெறப்போவது யார் என்று சொல்வது மிகக் கடினம். இந்தியா மிக சிறப்பாக விளையாடி வருகிறது. இங்கிலாந்து கடந்த சில வருடங்களில் இல்லாத அளவுக்கு சிறந்த அணியை பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவும் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் இந்திய அணி கடந்த சில வருடங்களில் செய்துள்ள சாதனைகளை பார்க்கும் போது, அவர்களை வீழ்த்துவது மிக மிக கடினம் என தோன்றுகிறது" என்று கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close