உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசி, வங்கதேசத்துடன் மோதும் இந்தியா

  Newstm Desk   | Last Modified : 01 Feb, 2019 09:27 am
virat-kohli-co-to-face-new-zealand-and-bangladesh

2019 ஐசிசி உலக கோப்பை போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுடன் மோதுகிறது.

ஐசிசி நடத்தும் உலக கோப்பை தொடர் இந்தாண்டு நடக்கிறது. இந்நிலையில் நேற்று இந்த தொடருக்கு முந்தைய பயிற்சி ஆட்டத்திற்கான பட்டியலை ஐசிசி அறிவித்தது. உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாட வேண்டும். இந்த போட்டிகள் பிரிஸ்டோல் கவுண்ட்டி கிரவுண்ட், கார்டிப் வேல்ஸ் ஸ்டேடியம், ஹம்ப்ஸ்பியர் பவுல் மற்றும தி ஓவல் மைதானங்களில் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பயிற்சி போட்டிகள் மே 24 முதல் 28 வரை 5 நாட்களுக்கு நடைபெறும். இதில் இந்திய அணி மே 25ம் தேதி சனிக்கிழமையன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி தி ஓவல் மைதானத்தில் நடக்கிறது. அடுத்த போட்டி மே 28ம் தேதி செவ்வாய் கிழமையன்று கார்டிப் வேல்ஸ் ஸ்டேடியம் மைதானத்தில் நடக்கிறது. இதில் வங்கதேசத்தை இந்திய அணி எதிர்கொள்கிறது. 

 

 

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி மே 25 மற்றும் 27ம் தேதி நடக்கும் போட்டியில் முறையே இங்கிலாந்து மற்றும் இலங்கையை எதிர்கொள்கிறது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close