மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஒரே பெண் வீரர் என்ற பெருமையை இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பெற்றுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இன்று இந்திய அணி விளையாடியது. இதில் விளையாடிய இந்திய அணி கேப்டனுக்கு இது 200வது போட்டியாகும்.
மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஒரேயொரு வீராங்கனை இவர் தான். மிதாலி ராஜ் 1999ம் ஆண்டு ஜூன் மாதம் ஒருநாள் போட்டியில் அறிமுகமானர். மேலும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீராங்கனை என்ற பெருமைக்கு சொந்தகாரராகவும் மிதாலி ராஜ் இருக்கிறார். இதோடு கேப்டனாக அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையையும் மிதாலி ராஜ் தன்வசம் வைத்துள்ளார்.
இவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் சார்லெட் எட்வேட்ஸ் இருக்கிறார். அவர் மொத்தமாக 191 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
newstm.in