கடைசி ஒருநாள் போட்டியில் தோனி ரிட்டர்ன்ஸ்!

  Newstm Desk   | Last Modified : 02 Feb, 2019 07:15 pm
dhoni-to-be-back-against-new-zealand-in-final-odi

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடுவார் என உதவி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், முன்னாள் கேப்டன் தோனி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து இந்திய அணி தொடரை வெல்ல உதவினார். நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளில் காயம் காரணமாக தோனி விளையாடவில்லை.
தோனியும் இல்லாமல், கோலியும் இல்லாமல், நான்காவது போட்டியில், இந்திய அணியின் மிடில் ஆடர் சொதப்பி, மோசமான தோல்வியை அடைந்த நிலையில், 5வது போட்டியில் தோனியின் தலைமை தேவைப்படுகிறது.

தற்போது தோனி முழுவதும் குணம் அடைந்து விட்டதாகவும், ஐந்தாவது போட்டியில் அவர் விளையாடுவார் எனறும் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். கடந்த போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சொதப்பிய நிலையில், அடுத்த போட்டியில் மிடில் ஆடர்  பேட்ஸ்மேன்கள் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close