அசத்திய பாண்டியா, ராயுடு: நியூசி அணிக்கு 253 இலக்கு

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 11:34 am
innings-break-newzealand-needs-253-to-win

நியூசிலாந்து எதிராக வெலிங்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்டியா, அம்பத்தி ராயுடு, கேதல் ஜாதவ், விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று வெலிங்டன் நகரில் வெஸ்ட்பேக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, ஷிக்கர் தவான், சுப்மன் கில் ஆகியோர் சொற்ப ரன்களில் விக்கெட் இழந்தனர். 

ஆனால் அதற்கடுத்து வந்த ஆட்டக்காரர்கள் நிதானமாக விளையாடினர். அம்பத்தி ராயுடு 90 ரன்கள் அடித்து அசத்தினார். விஜய் சங்கர் 45 ரன்களும், கேதர் ஜாதவ் 34, ஹர்திக் பாண்டியா 22 பந்துகளிலேயே 45 ரன்களும் எடுத்தனர். ஆனால் தோனி 1 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றினார். 

இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. 253 ரன்கள் இலக்கு என்ற நிலையில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close