நாளை வெளியாகிறது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2019 அட்டவணை

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 02:52 pm
bcci-to-announce-ipl-2019-s-schedule-on-monday-report

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின்  கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படுவது இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர். ஆண்டுதோறும் கோலாகலமாக நடக்கும் இந்த உள்நாட்டு கிரிக்கெட் தொடர் இந்தாண்டு இந்தியாவில் நடக்குமா அல்லது வெளிநாட்டில் நடக்குமா என்ற கேள்வி இருந்தது.

அதற்கு காரணம் இந்தாண்டு இந்தியாவில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தலுக்கு முன்பே தொடரை முடிக்க முடிவு செய்திருப்பதாகவும், எனவே இந்தியாவில் தான் ஐபிஎல் போட்டிகள் முழுவதும் நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்தது. 

இந்நிலையில் இந்த தொடருக்கான அட்டவணை நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த போட்டிகள் மார்ச் மாதம் 23ம் தேதி நடைபெறும் என்பதை முன்னரே பிசிசிஐ அறிவித்துவிட்ட நிலையில் நாளை அட்டவணை வெளியாக உள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close