2017ம் ஆண்டே உலக கோப்பைக்கான அணியை உருவாக்க தொடங்கிவிட்டோம்: எம்எஸ்கே பிரசாத்

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 03:19 pm
ipl-is-a-gateway-only-for-the-t20i-team

2017ம்ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோற்ற போதே உலக கோப்பை குறித்து யோசிக்க தொடங்கி விட்டோம் என்றும் தேர்வு குழு அதிகாரி எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது சிறப்பாக விளையாடி கொண்டு இருக்கும் பல இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி பின்னர் இந்திய  அணியில் இடம் பிடித்தவர்கள். 

இந்நிலையில் வெறும் ஐபிஎல் போட்டிகளை மட்டும் வைத்து ஒரு வீரரை எடை போட முடியாது என்ற விமர்சனம் வெகுவாக எழுந்தது. அதற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் தலைமைத் தேர்வு அதிகாரி எம்.எஸ்.கே பிரசாத் பதிலளித்துள்ளார். 

அவர், "ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் நிச்சயமாக தேர்வு குழுவால் கவனிக்கப்படுவர். இந்த தொடரில் உலகின் தலைசிறந்த வீரர்கள் விளையாடுகின்றனர். எனவே போட்டியின் வீரியம் அதிகமாகவே இருக்கும். இது போன்ற தொடரில் சிறப்பாக விளையாடுபவர்கள் நிச்சயமாக தகுதியான வீரர்களாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. 

ஆனாலும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் டி20 அணியில் தான் இடம் பெற முடியும். அவர்களை ஒருநாள் அணிக்கோ டெஸ்ட் அணிக்கோ நேரடியாக தேர்வு செய்வது இல்லை. இந்திய டி20 அணிக்கு தேர்வான பிறகு அவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் ஏற்படும்" என்றார். 

மேலும் பேசிய அவர் 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோற்ற போதே உலக கோப்பை குறித்து யோசிக்க தொடங்கி விட்டோம் என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close