5வது ஒருநாள்: நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 03:14 pm
india-beat-new-zealand-in-final-odi

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அம்பதி ராயுடுயின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என கைப்பற்றியுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் சரித்திரம் படைத்ததை தொடர்ந்து இந்திய அணி நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. முதல் மூன்று போட்டிகளிலேயே அபாரமாக வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. தொடரை வென்றதால் கடைசி இரண்டு போட்டிகளில் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டது. இந்நிலையில் நான்காவது போட்டியில் நியூஸிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற 5வது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஆனால் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 2வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அம்பதி ராயுடு, 90 ரன்கள் விளாசி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார். விஜய் ஷங்கர் 45 ரன்களும், கேதர் ஜாதவ் 34 ரன்களும், ஹர்டிக் பாண்ட்யா 45 ரன்களும் அடித்தனர். இதனால் இந்திய அணி, 49.5 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி, இந்திய வீரர் முகமது ஷமியின் பந்துவீச்சில் முதல் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது அதன்பின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் லேதம்(37) மற்றும் நீஷம்(44) நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். இறுதியில் அந்த அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 4-1 என கைப்பற்றியது. இந்திய அணியின் சஹால் 3 விக்கெட்களும், ஷமி பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்களும் எடுத்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close